நாட்டில் அரசியல் கட்சிகள் இன்று நீர்த்துப் போயுள்ளதாக முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapaksha) தெரிவித்துள்ளார்.
நாட்டின் வலுவான அரசியல் கட்சியாக ஒரு காலத்தில் காணப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியினால் ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கட்சியின் தலைவருக்கு தேர்தலில் போட்டியிட ஒரு கட்சி கிடைக்கவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மறுபுறத்தில் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்ட மொட்டுக் கட்சியினால் வேட்பாளர் ஒருவரைத் தேடிக் கொள்ள முடியாது திண்டாடி இறுதியில் ஒரு வேட்பாளரைக் கண்டுபிடித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க
இதன் மூலம் ஒரு விடயம் தெளிவாகின்றது எனவும், நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 பேரில் 25 பேர் கூட அடுத்த தேர்தலில் நாடாளுமன்றம் செல்ல மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்த 92 உறுப்பினர்களும் கூட்டாக இணைந்து 10000 வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சி உறுப்பினர்களின் ஆதரவினால் ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைக்கவிருந்த வாக்குகளும் கிடைக்காது என சுட்டிக்காட்டியுள்ளார்.