Home இலங்கை அரசியல் இலங்கை தமிழரசுக் கட்சி – டக்ளஸ் இடையில் அதி முக்கிய சந்திப்பு

இலங்கை தமிழரசுக் கட்சி – டக்ளஸ் இடையில் அதி முக்கிய சந்திப்பு

0

புதிய இணைப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்குமிடையிலான கலந்துரையாடல் சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.

முதலாம் இணைப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது
தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும்
இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகின்றது.

ஈ.பி.டி.பி – தமிழரசுக் கட்சி சந்திப்பு தொடர்பில் ஈ.பி.டி.பியின் செயலாளர்
நாயகம் டக்ளஸ் தேவானந்தா கருத்துத் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின்
தலைவர் சி.வி.கே சிவஞானமும் நேற்றுமுன்தினம் என்னுடன் தொலைபேசியில்
தொடர்பாடினார்.

சந்திப்பு

இன்று மாலை அவர்களுடன் சந்தித்துப் பேசவுள்ளோம்.

மேலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் பிரகாஷ்
என்னைச் சந்திப்பதற்குப் பல தடவைகள் முயற்சி செய்தார்.

இன்றைய தினம் தமிழரசுக்
கட்சியின் தலைவரோடு கலந்துரையாட உள்ளமையால், சந்திப்பின் பின் இது பற்றி
யோசிக்கலாம் என அவரிடம் தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version