தமிழரசுக் கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தில் பணியாற்றுவதற்கு பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை முன்வருமாறு தமிழரசுக் கட்சியின் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (31) யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவரை் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறிது காலத்தின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற இருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தற்போது அவசியமானதாகவுள்ளது.
இந்தநிலையில், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கட்சியின் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் இடம்பெறுவது மிகவும் குறைவாகவுள்ளதால் இதனை தவிர்த்து அணைவரும் அரசியல் நடவடிக்கைளுக்கு முன்வர வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/5ocZVL_OPmc