யாழ். ஸ்டான்லி வீதியில் உள்ள தியேட்டர் முகாமுக்கு சென்ற முதல் தமிழரசுக் கட்சி பிரமுகர் சி.வி.கே. சிவஞானம் தான் என ஊடகவியலாளர் குமணன் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த திரையரங்கம், ஒரு காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் சம்பந்தப்பட்ட சித்திரவதைகள் மற்றும் கடத்தல்களுக்கு தொடர்புடையது என அவர் கூறியுள்ளார்.
பேரம் பேசிய தமிழரசுக்கட்சி தலைவர்
போர் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொடூரமாக கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் பாரிய மனிதப்புதைகுழி அகழ்வு ஒன்று யாழ். செம்மணி வீதியில் நடந்துகொண்டிருக்கின்றது.
இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட பலர் தியேட்டர் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்று சாட்சியங்கள் அளிக்கப்பட்ட ஸ்டான்லி வீதி முகாமில் சென்று தமிழரசுக்கட்சி தலைவர் பேரம் பேசியுள்ளதாக ஊடகவியலாளர் குமணன் குற்றம் சுமத்தியுள்ளார்.
