Home இலங்கை அரசியல் போராட்டக்களத்தில் தன்னை விரட்டியவர்களை நாய் என்று கூறிய சி.வீ.கே!

போராட்டக்களத்தில் தன்னை விரட்டியவர்களை நாய் என்று கூறிய சி.வீ.கே!

0

வீதியில் நடந்து போகும் போது நாய்கள் குரைப்பது வழக்கமானது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

செம்மணி போராட்ட விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று(26.06.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழரசுக் கட்சித் தலைவர் விரட்டியடிக்கப்பட்டதாக செய்தி வந்தது. என்னை
யாரும் விரட்டியடிக்கவில்லை. அகற்றப்பட்டார் என்ற செய்தி வந்தது. நான்
அகற்றப்படவில்லை. எதுவுமே இல்லை. ஏன் இவ்வாறு செய்தியை போட்டார்கள் என்று
எனக்கு விளங்கவில்லை. உண்மையை எழுத வேண்டும்.

எனது பாட்டில் நான் வெளியேறி
சென்றேன்.
இவ்வாறான செய்திகள் எழுதும் பொழுது அது எம்மை பாதிக்கிறது. உண்மையில் அவ்வாறு
நடந்தால் பரவாயில்லை.

நாங்கள் இருந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இருந்தார்கள். ஒருவர் கூட
எமக்கு எதிராக குரல் எழுப்பவில்லை.

நல்ல ஒரு விடயமொன்றிற்கு இலங்கை தமிழ்
அரசுக் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காகவே நாம் அங்கு பங்கேற்று
இருந்தோம்.

உள்ளூராட்சித் தேர்தலில் நிமிர்ந்து நிற்கின்ற கட்சி என்ற வகையில் தமிழரசுக்
கட்சிக்கு பொறுப்பு இருக்கிறது. அந்த கடமையை செய்வதற்காக நாம் போய் இருந்தோம்.

வீதியில் சென்றால் நாய்கள் குரைப்பது வழமை. நான் அவ்வாறு சென்றேன், அவ்வாறே
அதுவும் நடந்தது. அது பரவாயில்லை. மக்கள் இதனை கண்டிக்க வேண்டும். மக்களுக்கு பொறுப்பு இருக்கிறது. ஏற்பாட்டாளர்கள் பல முயற்சிகளை எடுத்தார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

NO COMMENTS

Exit mobile version