Courtesy: Sivaa Mayuri
சீனர்கள் உட்பட வெளிநாட்டு பிரஜைகளை உள்ளடக்கிய இணையம் மூலமான நிதி மோசடிகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை குற்றப்புலனாய்வுத் துறையினர், சீனாவின் சிறப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவியை நாடியுள்ளனர்.
அண்மைய நாட்களில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இணைய நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் ஏராளமான சீன பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இருப்பினும், சந்தேக நபர்களின் மடிக்கணினிகள் மற்றும் தொலைபேசிகளில் உள்ள தரவுகள் சீன மொழியில் இருப்பதால் விசாரணைகள் தடைப்பட்டுள்ளன.
சீன மொழி
இந்நிலையில், குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு வெளிவிவகார அமைச்சின் தலையீட்டின் பேரில் இலங்கை பொலிஸார் சீன விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் உதவியை நாடியுள்ளனர்.
இதனையடுத்து, சீன விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள், இலங்கைக்கு வருகை தந்து தற்போது இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், இலங்கையில் இணையங்கள் மூலம் நிதி மோசடி செய்ததற்காக சீன பிரஜைகள் உட்பட மொத்தம் 137 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.