Home இலங்கை சமூகம் தேர்தல் கருத்துக்கணிப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேர்தல் கருத்துக்கணிப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கணக்கெடுப்புகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டியூஷன் வகுப்புகள் மற்றும் சமூக வலைதளங்கள் ஊடாக நடத்தப்படும் பல்வேறு கணக்கெடுப்புகள் குறித்து விசாரணை நடத்தி உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல்

இதேவேளை இவ்வாறான கணக்கெடுப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version