Home உலகம் கனடாவில் சைபர் தாக்குதலில் 10 மில்லியன் டொலர் களவு : வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் சைபர் தாக்குதலில் 10 மில்லியன் டொலர் களவு : வெளியான அதிர்ச்சி தகவல்

0

கனடாவில் (Canada) ரொறன்ரோவின் முன்னணி அறக்கட்டளை நிறுவனம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாக 10 மில்லியன் டொலர்கள் களவாடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அறக்கட்டளையானது இசை கலைஞர்கள் மற்றும் இசைத்துறை சார்ந்த ஏனையவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது.

இலாப நோக்கமற்ற வகையில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகின்ற நிலையில் குறித்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கினை ஊடறுத்து, சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.

மில்லியன் டொலர்

இவ்வாறு களவாடப்பட்ட பத்து மில்லியன் டொலர் பணம் கிரிப்டோ நாணயங்களாக மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி பவுன்டேசன் எஸிஸ்டிங் கனடிய டெலன்ட் ஒன் ரெக்கார்டிங்ஸ் (The Foundation Assisting Canadian Talent on Recordings) என்ற அமைப்பினால் இந்த அமைப்பின் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருட்டுச் சம்பவம்

இந்த தாக்குதல் தொடர்பில் கனடாவின் ஸ்கொட்டி வாங்கி பொறுப்பு சொல்ல வேண்டும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையவழி கடவு சொல் போன்றவற்றை இந்த நிறுவனம் உரிய முறையில் பயன்படுத்தவில்லை எனவும் இதனால் இந்த திருட்டுச் சம்பவத்திற்கு பொறுப்பு சொல்ல முடியாது எனவும் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/cyberattack-toronto-foundation-steals-million-usd-1733159444

NO COMMENTS

Exit mobile version