Home இலங்கை சமூகம் முல்லைத்தீவால் கரையை கடக்க போகும் புயல்

முல்லைத்தீவால் கரையை கடக்க போகும் புயல்

0

டிட்வா புயல் சற்று தீவிரம் பெறுகின்றது.மிகக்கனமழை, வேகமான காற்று வீசுகை மற்றும் கடல்நீர் உட்புகுதல் தொடர்பான எச்சரிக்கையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா விடுத்துள்ளார்.

டிட்வா புயலின் வெளி வளையம் வடக்கு மாகாணத்தை தொட்டுள்ளது.

இன்று இரவு டிட்வா புயலின் மையம் வட மாகாணத்துக்குள் பிரவேசிக்கும் வாய்ப்புள்ளது.
வெளி வளையம் தொட்டிருப்பதனால் படிப்படியாக மழை அதிகரித்து மிகக் கனமழை கிடைக்கும்.

காற்றின் வேகமும் அதிகரிக்கும். பல குளங்களுக்கு மிக அதிக நீர் வரத்தொடங்கியுள்ளது.
தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும்.

பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. சில குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. மேலும் சில குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளன. 

அத்தோடு முல்லைத்தீவு வழியாக நாட்டை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/17CK7_4-i88

NO COMMENTS

Exit mobile version