வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளரின் வாகனத்தின் மீது மரம் முறிந்து விழுந்ததில் வாகனம் சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(28) சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சேந்தாங்குளம் பகுதியில் முறிந்த மரங்களை வெட்டியகற்றுவதற்கு பிரதேசசபை ஊழியர்கள் பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முறிந்து விழுந்த மரம்
அத்தோடு, வாகனத்தின் பின் பகுதியில் மரம் முறித்து விழுத்ததால் வாகனத்தின் உள்ளே இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
வலி.வடக்கு பிரதேசசபையின் பாதீட்டு சபை அமர்வு நடைபெற்றதால் வலி வடக்கு தவிசாளர் வாகனத்தில் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
