Home இலங்கை அரசியல் டேன் பிரியசாத் படுகொலை! அநுரவின் நகர்வின் பின்னர் சாட்சிகளை அழிக்க பரபரப்பு திட்டம்

டேன் பிரியசாத் படுகொலை! அநுரவின் நகர்வின் பின்னர் சாட்சிகளை அழிக்க பரபரப்பு திட்டம்

0

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் படுகொலை விவகாரமானது தற்போது இலங்கையில் சூடுப்பிடித்துள்ளது.

அரசியல் செயற்பாட்டாளராக அறியப்படும் இவர் துப்பாக்கிசூட்டு இலக்காகிய நிலையில் முதலில் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது, பின்னர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்று கூறப்பட்டது, இறுதியில் தான் அவர் உயிரிழந்து விட்டார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியிருந்தனர்.

டேன் பிரியசாத் ராஜபக்சர்களின் கடந்த கால நகர்வுகளில் தொடர்புபட்டவராகவும், அவர்களின் ஆதரவுடன் நவ சிங்கள தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டாளராகவும் இருக்கின்றார்.

இந்த நிலையில் அநுரகுமாரதிசாநாயக்கவின் பரப்புரை கூட்டமொன்று தொடர்பில் தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவொன்றையிட்ட ஒரு சில மணித்தியாலங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இது இவ்வாறிருக்க அநுரகுமார திசாநாயக்க எடுத்துவரும் நகர்வுகளிள் அடிப்படையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கைது செய்யப்பட்டமை தொடர்ந்து டேன் பிரியசாத்தும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் ராஜபக்சர்களே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

இந்த விடயங்களை ஆராய்கின்றது இன்றைய பார்வை நிகழ்ச்சி….

NO COMMENTS

Exit mobile version