Home இலங்கை சமூகம் தென் கொரியா விமான விபத்தின் விளைவு: இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தென் கொரியா விமான விபத்தின் விளைவு: இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

0

கொழும்பு, ரத்மலான விமான நிலையத்தில் உள்ள நிலையான கட்டமைப்புகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் 179 உயிர்களை காவு கொண்ட விமான விபத்தை அடுத்தே அமைச்சர் பிமல் ரத்நாயக்க,இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இலங்கையின் விமான உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்; சங்கம் என்பனவும் விமான நிலையத்தில் உள்ள நிலையான கட்டமைப்புகளுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து,அரசாங்கத்தையும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தையும் பல முறை கோரியிருந்தன.

 9 கன அடி சுவர்,

இதன்படி காலிவீதி எல்லையில் உள்ள 9 கன அடி சுவர், சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த சுவரை அகற்ற வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version