Home இலங்கை சமூகம் யானையிடமிருந்து உயிரை காப்பாற்ற ஆற்றில் குதித்த நபர் மாயம்!

யானையிடமிருந்து உயிரை காப்பாற்ற ஆற்றில் குதித்த நபர் மாயம்!

0

காட்டு யானையிடமிருந்து  உயிரை காப்பாற்ற ஆற்றில் குதித்த நபர் ஒருவர் நீரில்
இழுத்து செல்லப்பட்ட சம்பவம் மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.

காட்டுபகுதியில் விறகு வெட்ட சென்ற தந்தையும் 14 வயது மகனும் இவ்வாறு ஆற்றில் குதித்த நிலையில், தந்தை காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தனையாற்று பகுதியில் சம்பவம், இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மயிலவெட்டுவான் ஊப்போடை வீதியைச் சோந்த 49 வயதுடைய ஞானப்பிள்ளை அரணாகரன்
என்பவரே இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேலும்,  தெரியவருவதாவது.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த தந்தையும் அவரது 14 வயதுடைய மகனும் காட்டையண்டிய
பகுதியில் விறகு வெட்டி வருவதற்காக  சென்றுள்ளனர்
.

இதன்போது அங்கு யானையை கண்டவுடன் , தங்களின் உயிரை காப்பாற்றுவதற்காக தப்பி ஓடி அருகிலுள்ள முந்தனையாற்றில் குதித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுவன் மாத்திரம் வெளியில் வந்த நிலையில் தந்தையார்
நீரில் இருந்து வெளிவராது இருந்துள்ளார்.

இதன்போத அவரை தேடிய சிறுவன், வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை
தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version