மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிக்க வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் shanakiyan rasamanikam)அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றையதினம்(17) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
சட்டச் சிக்கல் பிரச்சனையை தீர்ப்போம்
“மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது என்றும், சட்ட சிக்கல் காரணமாக அவர்கள் அதை நடத்த மாட்டார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள். அப்படியானால், அந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வோம்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
ஜனாதிபதி அநுர நாடாளுமன்றத்தில் இருக்கும்போது அந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
