Home இலங்கை சமூகம் காணாமல் போன தனது தாயை கண்டுபிடிக்க உதவுமாறு ஊடகங்களிடம் மகள் உருக்கமான கோரிக்கை..!

காணாமல் போன தனது தாயை கண்டுபிடிக்க உதவுமாறு ஊடகங்களிடம் மகள் உருக்கமான கோரிக்கை..!

0

தனது தாயாரை கடந்த மாதம் 10 ஆம் திகதியிலிருந்து முல்லைத்தீவு செல்வபுரத்திலிருந்து காணவில்லை என்றும் அவரை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்றும் பெண்ணொருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணாமல் போனவரான சலோமியாம்பிள்ளை மேரி பிலோமினாவின் மகள் முடியழகன் வேணி இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

தாயாரை காணவில்லை

அவர் இன்று(30.05.2025) கற்கோவளத்திலுள்ள தனது இல்லத்தில் வைத்து நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, தனது தாயார் உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றதாகவும், ஆனால் அவர் அங்கும் செல்லவில்லை, வீட்டிற்கும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

கோரிக்கை

தனது தாயார் முல்லைத்தீவு மற்றும் பிலோமினா என்று மட்டுமே பேசத்தெரிந்தவர் என குறிப்பிட்டுள்ளதுடன் அவர் வாய் பேச முடியாதவர் என்று கூறியுள்ளார்.

அவர் தொடர்பான தகவல் ஏதும் தெரிந்தால் தமது தொலைபேசி இலக்கமான 0775570692 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு அறிவித்துதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version