Home சினிமா படுதோல்வியடைந்த DD Next level.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

படுதோல்வியடைந்த DD Next level.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

0

DD Next Level

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சந்தானம். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் DD Next Level. இப்படத்தை இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்க நடிகர் ஆர்யா தயாரித்திருந்தார்.

கீத்திகா டிவாரி இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கவுதம் மேனன், மொட்டை ராஜேந்தர், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

ப்ரீ புக்கிங்கில் கமல்ஹாசனின் தக் லைஃப் செய்துள்ள மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால் வசூலிலும் பெரிதளவில் அடிவாங்கியுள்ளது. இந்த நிலையில், DD Next level திரைப்படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

வசூல் விவரம்

கடந்த 16ம் தேதி வெளிவந்த DD Next level படம் முதல் நாளில் இருந்தே குறைவான வசூலை பெற்று வந்தது. இந்த நிலையில், 12 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் ரூ. 19 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version