Home இலங்கை சமூகம் புத்தளத்தில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் : காவல்துறையினர் தீவிர விசாரணை

புத்தளத்தில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் : காவல்துறையினர் தீவிர விசாரணை

0

புத்தளம் (Puttalam) உடப்பு காவல் பிரிவுக்குட்பட்ட பூனைப்பிட்டி கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலமொன்று கரையொதிங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது இன்று (2) பகல் கரையொதுங்கியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனடிப்படையில், சடலம் கரையொதுங்கிய பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர் ஒருவர் கடற்கரையோரத்தில் இவ்வாறு சடலமொன்று கிடப்பதை அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலம்

இதையடுத்து, உடனடியாக பிரதேச மக்களுடன் இணைந்து அந்த பகுதிக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் ஊடாக காவல்துறையினருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த உடப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் சடலமாக கரையொதுங்கிய பெண் 40 வயது முதல் 50 வயதுக்கு இணைப்பட்டவர் என தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, குறித்த பெண்ணின் சடலம் உருக்குலையாத நிலையில் ஆடை எதுவுமின்றி காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

சிறுநீர பட்டை பொருத்தப்பட்ட நிலையில் குறித்த பெண்ணின் சடலம் கரையொதுங்கியுள்ளமையினால் அந்த பெண் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவராக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.வசீம் ராஜா, சடலத்தை பார்வையிட்டு நீதிவான் விசாரணையை அடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இவ்வாறு கரையொதுங்கிய குறித்த பெண்ணின் சடலம் யாருடையது என்பது தொடர்பில் உடப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version