கொழும்பு (colombo) நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் நாட்டின் பணவீக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில்,, கடந்த மே மாதம் 0.9 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், ஜுன் மாதம் 1.7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
அதன்படி கடந்த மே மாதம் பூச்சியமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் (Food inflation) ஜுனில் 1.4 சதவீதமாகவும், மே மாதம் 1.3 சதவீதமாகப் பதிவான உணவல்லாப் பணவீக்கம் ஜுனில் 1.8 சதவீதமாகவும் உயர்வடைந்தன.
பொருளாதாரத்தின் அடிப்படைப்பணவீக்கம்
இதற்கு உணவுப்பொருட்களின் விலைகள் மற்றும் உணவல்லாப்பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்பு காரணமாக அமைந்துள்ளது.
மேலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் ஜுனில் 0.77 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
பொருளாதாரத்தின் அடிப்படைப்பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த மே மாதத்தில் பதிவான 3.5 சதவீதத்திலிருந்து ஜுன் மாதத்தில் 4.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.