முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை இன்றைய(20) தினத்திற்குள் கையளிக்குமாறு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர(Kushani Rohanadheera) இது தொடர்பாக தெரிவிக்கையில்,
உத்தியோகபூர்வ இல்லங்கள்
108 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டிருந்தது.இதுவரை 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை கையளித்துள்ளனர்.
108 உத்தியோகபூர்வ இல்லங்களில் 70 இல்லங்களின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று 10ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் டிசர்பர் மாதம் 3ஆம் திகதிக்கு பின்னர் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.