Home இலங்கை சமூகம் நீர் நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

நீர் நிலையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0

மட்டக்களப்பு (batticaloa) களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டாபுரம்
கிராமத்தில் அமைந்துள்ள நீர் நிலையிலிருந்து சடலம் ஒன்று இன்று (06.02.2025) பகல் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பட்டாபுரம் கிராமத்தைச் சேரந்த 56 வயதுடை 4
பிள்ளைகளின் தந்தையான சேதுநாதபிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

இன்று அதிகாலை கடற்தொழிலில் ஈடுபடுவதற்காக அவரது வீட்டிலிருந்து
குறித்த நபர் புறப்பட்டுள்ளார்.

கடற்தொழிலுக்குச் சென்றவரைக் பகல் வேளையாகியும்
காணவில்லை என உறவினர்கள் தேடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையிலேயே அவர் நீர்
நிலையில் உயிரிழந்த நிலையில் வீழ்ந்து கிடபபதை அவதானித்துள்ளனர்.

சம்பவம் அறிந்த பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளதுடன்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version