Courtesy: Thaventhiran
கிளிநொச்சி மாவட்டத்தில் காற்றாலை மின்திட்டம் குறித்து மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராஞ்சி
(வேரவில்) பகுதியில் 204 மெகாவாட் காற்றாலை மின்திட்டம் மற்றும் கரைச்சி
பிரதேச செயலாளர் பிரிவில் 100 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி திட்டம்
தொடர்பான சுற்றாடல் தாக்க மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி
கலந்து கொண்டோர்
இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார
சபையின் தலைவர் பேராசிரியர் டபிள்யூ. பண்டார தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையின்
உதவிப்பணிப்பாளர்களான பி். டிலக்சன் மற்றும் சத்துர வன்னியராச்சி மாவட்ட
அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தின் இராணுவ
அதிகாரி, விமானப்படை அதிகாரி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து திணைக்களங்களின்
உதவிப்பணிப்பாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
