தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றதற்காக முச்சக்கர வண்டி சாரதியான மகனுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 54 வயதான முச்சக்கர வண்டி சாரதியான முகமது ஹுசைன் முகமது சதாஸ் என்ற பிரதிவாதிகே நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கொலை சம்பவம்
சம்பவத்தில் உயிரிழந்தவர் 79 வயதுடையவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்படி, பிரதிவாதி வேண்டுமென்றே தனது தந்தையை அடித்துக் கொன்றதற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதாகவும், அனைத்து குற்றச்சாட்டுகளையும் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்று வெல்லம்பிட்டி, விவேகராம மாவத்தையில் உள்ள ஒரு வீட்டிற்குள் தனது தந்தையின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி சம்பந்தப்பட்ட நபர் கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
[S0UKJ9O
