Home இலங்கை சமூகம் கிராம உத்தியோகத்தருக்கு எதிராக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நபருக்கு கொலை மிரட்டல்

கிராம உத்தியோகத்தருக்கு எதிராக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நபருக்கு கொலை மிரட்டல்

0

பக்கச்சார்பாக செயற்படும் கிராம உத்தியோகத்தருக்கு எதிராக ஊடகங்களுக்கு
கருத்து தெரிவித்த நபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இலங்கையின் பல்வேறு
பகுதிகள் முற்றாக பாதிக்கப்பட்டது.

 அதன் அடிப்படையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில்
அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதன்மையாக நாகர் கோவில் பகுதி காணப்படுகிறது.

மேலதிக விசாரணை

இந்தக் கிராமத்தில் பணி புரியும் கிராம உத்தியோகத்தர் பக்க சார்பாக
செயற்படுவதாகவும் சில பாதிக்கப்பட்ட வீடுகளை இது வரைக்கும் கிராம
உத்தியோகத்தர் வந்து பார்வை யிட வில்லை எனவும் நாகர் கோவில் மக்கள் அண்மையில்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

 கருத்து தெரிவித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு மூலம் ஊடகங்களுக்கு கொடுத்த
கருத்தினை மறுபடியும் வாங்கும் மாறும் இல்லை என்றால் ஆள் வைத்து கொலை
செய்ததாகவும் கொலைமிரட்டல் விடப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்ட நபர்
கூறியுள்ளார்.

 இந்த சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version