பருத்திதுறை நகரசபை 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று
நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபை அமர்வு தவிசாளர் வின்சன்ட் டீ போல் டக்ளஸ் போல் தலமையில் இன்று காலை 9:30
மணியளவில் நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் 2026 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது,
இதில் 8 வாக்குகள் ஆதரவாகவும் ஏழு வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன.
சிறிது நேரம் குழப்பம்
மேலதிக
ஒரு வாக்கால் 2026 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாதீட்டுக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பேரவையின் 5 உறுப்பினர்களும், ஜனநாயகத்
தமிழ்த் தேசிய கூட்டணி உறுப்பினர்கள் இருவரும், சுயேட்சை (ஊசி) உறுப்பினர்
ஒருவரும் வாக்களித்திருந்தனர்.
தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி
ஆகியவற்றை சேர்ந்த ஏழு உறுப்பினர்களும் எதிராக வாக்களித்திருந்தனர்.
இதையடுத்து ஒரு மேலதிக வாக்கினால் பாதீடு நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை மூன்று குடும்பங்களுக்கு ரூபா 200000 பெறுமதியான உதவிகளும் நகரசபையால்
வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது மரக்கறி சந்தை குத்தகை மற்றும் துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலைய
குத்தகை விடயம் தொடர்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு கோரப்பட்ட
போது தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி ஆகிய கட்சிகளை சேர்ந்த ஏழு
உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர். இதனால் சபையில் சிறிது நேரம்
குழப்பம் ஏற்பட்டிருந்தது.
மேலதிக செய்தி – பிரதீபன்
