Home இலங்கை சமூகம் பேரிடர் நிலையிலும் இலங்கையை வந்தடைந்த சுற்றுலா சொகுசு பயணக் கப்பல்!

பேரிடர் நிலையிலும் இலங்கையை வந்தடைந்த சுற்றுலா சொகுசு பயணக் கப்பல்!

0

அதிசொகுசு சுற்றுலாப் பயண கப்பலான டி.பீ. லுமினியா எனப்படும் கப்பல் சுற்றுலாப் பயணிகளுடன் இன்று (15.12.2025) இலங்கையை வந்தடைந்தது.

அதன்படி, மோல்டாவிலிருந்து 135 சுற்றுலாப் பயணிகளுடன் குறித்த கப்பல் இன்று (15.12.2025) காலை காலி துறைமுகத்தை வந்தடைந்தது.

சுற்றுலாத் துறை 

இவ்வாறு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகள் இன்றைய தினம் முழுவதும் காலி நகரைச் சுற்றிப் பார்த்த பின்னர் இன்று (15.12.2025) மாலை வேளையில் மீண்டும் புறப்படவுள்ளனர்.

“டித்வா” புயல் காரணமாக இலங்கையில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

போக்குவரத்து, மின்சாரம் என அனைத்து அத்தியாவசிய சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்தும் மீள சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இவ்வாறான சூழ்நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவது இலங்கை சுற்றுலாத் துறையை உயிர்பிக்கச் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

NO COMMENTS

Exit mobile version