Home இலங்கை அரசியல் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள 22 எம்.பிக்கள்! வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள 22 எம்.பிக்கள்! வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

0

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 பேருக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் வெளியான தகவலையடுத்து, அந்த எம்.பி.க்களின் பெயர்களை உடனடியாக நாட்டுக்கு தெரியப்படுத்துமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சபாநாகரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு நேற்று(18.12.2025) சபாநாயகரை சந்தித்து இந்த விவகாரம் குறித்து உத்தியோகபூர்வமாக அவருக்கு தெரிவித்துள்ளோம்.

அவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது என்றும், இது தொடர்பாக சபாநாயகரின் பொறுப்பு மிகவும் முக்கியமானதாகும்.
எனக்கு வந்த அச்சுறுத்தல்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தாலும், இதுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

இதற்கு முன்னர் பொலிஸ் மா அதிபர் கட்சித் தலைவர்களைச் சந்தித்தபோது, ​​எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய சந்தர்ப்பத்திலும் குறித்த 22 எம்.பி.க்களுக்கு தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டதாக முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

இத்தகைய அச்சுறுத்தல்கள் நாட்டின் ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் கடுமையான சவாலாகியுள்ளது.மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அச்சுறுத்தலுக்கு உள்ளான எம்.பி.க்களின் பெயர்களை வெளியிட்டு அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவது அரசாங்கத்தின் மற்றும் பாதுகாப்புப் படைகளின் கட்டாயப் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

Exit mobile version