Home முக்கியச் செய்திகள் லிட்ரோ எரிவாயு விலை திருத்தம்: நிதியமைச்சு எடுக்கவுள்ள முடிவு

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம்: நிதியமைச்சு எடுக்கவுள்ள முடிவு

0

லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலை திருத்தத்திற்காக சமர்ப்பித்த பரிந்துரை தொடர்பான நிலைப்பாடு இன்று (10) அறிவிக்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக சந்தை விலைகளுக்கு ஏற்ப நாட்டின் எரிவாயு விலையை திருத்துவதற்கான ஒப்புதல் பெறுவதற்காக பரிந்துரைகளை லிட்ரோ நிறுவனம் நிதியமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்திருந்தது.

அதன்போது, எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

புதிய விலைகள்

எனினும், இதுவரையிலும் எரிவாயு விலை திருத்தத்திற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.

 

இவ்வாறனதொரு பின்னணியில், விலை திருத்தம் தொடர்பாக நிலைப்பாட்டை நிதி அமைச்சு இன்று (10) வெளியிடவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், லிட்ரோ திருத்தத்திற்கு ஏற்ப புதிய விலைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று லாஃப் நிறுவனமும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version