Home இலங்கை அரசியல் நீதியமைச்சர் விஜயதாசவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் வெளியாகவுள்ள முக்கிய முடிவு

நீதியமைச்சர் விஜயதாசவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் வெளியாகவுள்ள முக்கிய முடிவு

0

Courtesy: Sivaa Mayuri

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் (
Wijeyadasa Rajapakshe) கட்சி உறுப்புரிமை தொடர்பில், நாளைய தினம முக்கிய தீர்மானத்தை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகிறது.

இந்த நடவடிக்கையால் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்.

இது தொடர்பில் நாளை கூடவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

கட்சியின் யாப்பு

இதன்போது அமைச்சர் விஜயதாச கட்சியின் யாப்பை மீறியதாகக் கண்டறியப்பட்ட அறிக்கையை அங்கீகரிக்குமாறு உறுப்பினர்கள் கோரப்படுவார்கள்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாப்பு, கட்சியின் உறுப்பினர்கள் வேறு எந்த அரசியல் கட்சியிலும் அங்கத்துவம் பெறுவதை தடை செய்கிறது.

எனினும் பொதுஜன பெரமுனவுடன் முரண்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினது ஒரு பிரிவின் தலைவராக விஜயதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அந்தக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வளர்ச்சியின் பின்னணியில் விஜயதாச ராஜபக்சவின் உறுப்புரிமை நீக்கப்பட்டால், அவரின் அமைச்சு பதவி தொடர்பில் பிரச்சினைகள் எழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version