Home இலங்கை அரசியல் ஹிருணிகாவின் பிணை மனு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

ஹிருணிகாவின் பிணை மனு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

0

கொழும்பு (Colombo) மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra), தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை, ஜூலை 15 இல், பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிணை விண்ணப்பத்திற்கு எதிராக சட்டமா அதிபர் எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

எனவே, இந்த வழக்கை ஜூலை 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடூழிய சிறைத்தண்டனை

தெமட்டகொடையில் (Dematagoda) டிபென்டர் வாகனத்தை பயன்படுத்தி இளைஞர் ஒருவரை கடத்தி, தாக்குதல் நடத்தியதுடன் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள வழக்கிலே ஹிருணிகா குற்றவாளியாகக் காணப்பட்டார்.

இந்த வழக்கில் ஒன்பதாவது குற்றவாளியான அவர் குற்றமற்றவர் எனத் தெரிவித்ததால், அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 20 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version