Home இலங்கை அரசியல் தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்துங்கள் : அரசிடம் சஜித் கோரிக்கை

தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்துங்கள் : அரசிடம் சஜித் கோரிக்கை

0

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குறைந்தபட்சம் ஒரு தேசிய துக்க தினமாவது அறிவிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (3) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று நாம் பேரழிவு பற்றி விவாதிக்கவிருந்தோம். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்காததற்கும், பட்ஜெட்டை விவாதிக்க வேண்டியதற்கும் நாங்கள் வருந்துகிறோம்.

நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட நான்காவது துயரம்

பேரழிவால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கு இந்த அளவுக்கு கவனம் செலுத்தப்படாததற்கு நாங்கள் வருந்துகிறோம். நான்கு ஆண்டுகளில் நம் நாட்டில் ஏற்பட்ட நான்காவது துயரம் இது.

ஈஸ்டர் தாக்குதல், கொரோனா நெருக்கடி, நாட்டின் திவால்நிலை மற்றும் சூறாவளி போன்ற நெருக்கடிகளே அவையாகும்.

ஒரு தேசிய துக்க நாளாவது அறிவிக்கப்பட வேண்டும்

பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விவாதம் நடத்த அரசாங்கம் தவறிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு தேசிய துக்க நாளாவது அறிவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக்கொள்வது நம் அனைவரின் பொறுப்பாகும், ”என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். 

NO COMMENTS

Exit mobile version