Home இலங்கை பொருளாதாரம் நாடாளுமன்ற செலவுகளை குறைக்க அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள திட்டம்

நாடாளுமன்ற செலவுகளை குறைக்க அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள திட்டம்

0

நாடாளுமன்றத்தில் ஏற்படும் அதிக செலவைீனங்களை குறைப்பதற்காக உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை வழிநடத்துவதற்கு இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற அதிகாரியின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புள்ளிவிபரங்கள் 

உறுப்பினர்களுக்கு இதுவரை அனுபவித்து வந்த வாகன கொடுப்பனவு, ஓய்வூதியம், வீடமைப்பு கொடுப்பனவு மற்றும் ஏனைய நிதி சலுகைகளை குறைப்பதற்கான பிரேரணையை இந்த குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

அதேவேளை, நாடாளுமன்றத்தின் வருடாந்த வரவுசெலவுத் திட்டம் 4 – 5 பில்லியன் ரூபா வரம்பில் உள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகளுக்காக மட்டும் ஒரு பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என நாடளுமன்ற புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. 

NO COMMENTS

Exit mobile version