Home இலங்கை கல்வி ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

0

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 1) திகதி ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு ஊவா மாகாண ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (31) கொண்டாடப்படவுள்ள நிலையில், தீபாவளி தினத்துக்கு மறுநாள் தமிழ் மாணவர்களுக்கு பாடசாலைக்கு வருவதில் சிரமம் என்பதால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

 

விடுமுறை அளிப்பதற்கு அங்கீகாரம்

இதன்படி, 01.11.2024 அன்று தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த நாளுக்கான கல்வி செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

NO COMMENTS

Exit mobile version