Home சினிமா பிரபாஸ் படத்தில் இருந்து விலகியது ஏன், ஓபனாக கூறிய நடிகை தீபிகா படுகோனே…

பிரபாஸ் படத்தில் இருந்து விலகியது ஏன், ஓபனாக கூறிய நடிகை தீபிகா படுகோனே…

0

ஸ்பிரிட்

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள திரைப்படம் ஸ்பிரிட்.

இப்படத்திற்கான அறிவிப்பு வந்த போது தீபிகா படுகோன் நாயகியாக நடிக்க உள்ளார் என கூறப்பட பின் சில காரணங்களால் வெளியேறியுள்ளார்.

தற்போது இந்த படத்தில் நாயகியாக திரிப்தி டிம்ரி நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார், இதில் நடிக்க அவருக்கு ரூ. 4 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாக கூறப்பட்டது.

இடையில் இந்த படத்தில் கமிட்டான பிரபலம் ஒருவர் படத்தின் கதையை லீக் செய்துவிட்டார் என இயக்குனர் தரப்பில் கூறப்பட தீபிகா படுகோனே இப்படி செய்யலாமா என பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.

நடிகை பதிலடி

இப்படி ஒரு விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் நடிகை தீபிகா படுகோனே இப்படம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், சமீபத்தில் ஒரு இயக்குனர் கதை சொன்னார், Creativityஆக படத்தின் கதை எனக்கு பிடித்தது. சம்பளம் பற்றி பேசும்போது எனக்கு அவ்வளவு ஒதுக்க முடியாது, நாயகனுக்கு அதிகம் இருப்பதால் உங்களுக்கு இவ்வளவு முடியாது என்றனர்.

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம்

அப்போது சரி டாடா பாய் பாய் என்றேன், அந்த நடிகரின் சமீபத்திய படங்களை விட எனது படங்கள் நன்றாகவே ஓடியுள்ளது. எனது மார்க்கெட் பற்றி எனக்கு தெரியும் என பேசியுள்ளார்.  ஆனால் கதை வெளியிட்டுவிட்டார் என்று வந்த குற்றச்சாட்டு குறித்து எதுவும் பேசவில்லை.

NO COMMENTS

Exit mobile version