Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமானுக்கு எதிராக அவதூறு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமானுக்கு எதிராக அவதூறு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் உறுப்பினருமான பிரதீப் சார்லஸ் உட்பட்ட பலருக்கு எதிராக, கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி நிபந்தனைக்குட்பட்ட தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமானுக்கு எதிராக அவதூறான மற்றும் அவமதிக்கும் வகையில் கருத்துகளை இணையத்தில் வெளியிட்டதாக கூறி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு

2024 ஆம் ஆண்டு 9 ஆம் எண் இணைய பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 24 இன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தாக்கல் செய்த முறைப்பாட்டை பரிசீலித்த பின்னர், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளில் பிரதீப் சார்லஸ், யூடியூப் தள உரிமையாளர்கள் நதீஷா அமரநாத் மற்றும் துஷாரா செவ்வந்தி ஆகியோர் அடங்குவர்.

மனுதாரரின் சமர்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்ட பிரதம நீதிவான் நிபந்தனைக்குட்பட்ட தடை உத்தரவைப் பிறப்பித்து, அனைத்து பிரதிவாதிகளும் ஜூன் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version