Home இலங்கை அரசியல் கண்டி தலதா பெரஹராவை தேசிய மக்கள் சக்தி நிறுத்தும்: பொய் என்று கூறி அவதூறு வழக்கு...

கண்டி தலதா பெரஹராவை தேசிய மக்கள் சக்தி நிறுத்தும்: பொய் என்று கூறி அவதூறு வழக்கு தாக்கல்

0

Courtesy: Sivaa Mayuri

தேர்தல் பேரணியின் போது, பொய்யான மற்றும் அவதூறான கருத்தை வெளியிட்டதாக கூறி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (11.09.2024) அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

2024ஆம் ஆண்டு ஒகஸ்ட் 19ஆம் திகதி, பிரதிவாதியான திஸ்ஸ அத்தநாயக்க, மாவனெல்லையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கண்டி தலதா பெரஹரவை நிறுத்தும் என பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

வெளியிடப்பட்ட அறிக்கை 

அத்துடன், பிரதிவாதியான அவர், இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக ஹரிணி அமரசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version