தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஆயுதங்கள்,
சுங்கத்துறையால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் வழியாக நாட்டிற்குள்
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட தகவலை பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டுகளையே பாதுகாப்பு
அமைச்சகம் நிராகரித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொண்டா, இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும்
ஆதாரமற்றது எனவும் பொய்யானது எனவும் அவர் நிராகரித்துள்ளார்.
ஆதாரம் இல்லை
அத்தகைய கூற்றுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
