Courtesy: Sivaa Mayuri
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு நாடும், தமது பிரதேசத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என இலங்கை உறுதியளித்துள்ளது.
இலங்கையின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இதனை இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நாடும் அனுமதிக்கப்படாது
அத்துடன், இலங்கை துறைமுகங்களில் ஆய்வுக் கப்பல்கள் நிறுத்தப்படுவதற்கான தடை அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதற்கு சீனா உட்பட எந்தவொரு நாடும் அனுமதிக்கப்படாது என்ற இலங்கையின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கை தனது சொந்த கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.