Home இலங்கை சமூகம் பேருந்து சேவை தர உறுதிப்பாட்டில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்

பேருந்து சேவை தர உறுதிப்பாட்டில் கண்டறியப்பட்ட குறைபாடுகள்

0

மாகாணங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து சேவைகளை ஆய்வு செய்வதில்
குறிப்பிடத்தக்க குறைபாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணையகத்தின்
கணக்காய்வு அறிக்கையில் இந்த குறைப்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆணையகம், சுமார் 3,200
பயணிகள் சேவைகளுக்கு அனுமதிகளை வழங்கியது.

பயணிகளின் பாதுகாப்பு 

இருப்பினும், 1,515 பேருந்துகள் மட்டுமே, அதாவது சுமார் 47 வீதமாக பேருந்துகள்
மாத்திரமே, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் தர ஆய்வுகளுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும்
வசதியைப் பராமரிக்க அனைத்து பேருந்துகளும் உரிய ஆய்வுகளுக்கு உட்படுத்தல்
அவசியம் என்று கணக்காய்வு அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version