Home இலங்கை குற்றம் கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் செவ்வந்தி குழு கூறிய புதிய தகவல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் செவ்வந்தி குழு கூறிய புதிய தகவல்!

0

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் ஐந்து பேரால் திட்டமிடப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, தருண், இஷாரா செவ்வந்தி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய சமிந்து டில்ஷான் ஆகியோர் இந்தக் கொலையின் மூளையாக செயற்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை

கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி, கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5ஆம் எண் மஜிஸ்திரேட் நீதிமன்ற மண்டபத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version