பலாலியில் இதுவரை அதிகம் தரையிறங்காத C130 ரக பெரிய சூப்பர் ஹெர்குலிஸ் சரக்கு விமானங்கள் எல்லாம் தரையிறங்கும் அளவுக்கு
இலங்கையை மையப்படுத்திய இந்தோ பசுபிக் மேற்பார்த்த புவிசார் அரசியல் நிவாரண ராஜதந்திர ஓட்டங்களாக மாறியுள்ளன.
இலங்கையில் பெய்த பெருமழையால் பெருகிய கலங்கிய வெள்ள நீரில் தமக்கெனவும் சில மீன்களை பிடிக்கும் வகையில் அமெரிக்கா முதல் இந்தியாவரை நகர்ந்தாலும் இலங்கையின் மீட்புக்கு இந்த உதவிகள் அவசியப்படுகின்றன.
அமெரிக்க இராணுவத்தின் சரக்கு வான்கலம் நேற்று
பலாலியில் தரையிறங்கிய சமகாலத்தில் பசிபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்க வான்படைத்த தளபதி ஜெனரல் கெவின் சினைடரின் வாயில் இருந்து ஒரு கருத்தியல் சரக்கு இறங்கியுள்ளது.
அமெரிக்காவும் இப்போது களமிறங்கியதால் இலங்கை மீதான இந்திய ஒப்ரேசன் சாகர் பந்து பெய்லி பாலங்களின் தரையிறக்கத்துடன் தொடர்கிறது
இன்று முற்பகலிலும் இந்தியாவில் இருந்து இன்னொரு பெய்லிபாலமும் மருந்துப்பொருட்களும் வான்மார்க்கமாக கொழும்பில் தரையிறங்கின இவ்வாறாக ஏற்கனவே இறங்கிய பெய்லிபாலங்களில் ஒன்றுடன் முல்லைத்தீவு ஏ-35 வீதியில் இந்திய ராணுவத்தின் பொறியியல் பிரிவு நிற்கிறது.
இதற்கும் அப்பால் இலங்கைக்கான நிவாரண உதவிகளுக்காக இந்திய கடற்படை 4 கடற்கலங்களும் இலங்கையில் சுற்றும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு…
https://www.youtube.com/embed/pfWIpmM1RFA
