Home இலங்கை பொருளாதாரம் இலங்கை பொருளொன்றுக்கு வெளிநாட்டில் அதிக கிராக்கி

இலங்கை பொருளொன்றுக்கு வெளிநாட்டில் அதிக கிராக்கி

0

தேங்காய் சிரட்டைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருடத்திற்கு 300 மில்லியன் டொலர் வருமானம் நாட்டிற்கு கிடைக்கப்பெறுவதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தேங்காய் சிரட்டைகளில் இருந்து கரி உற்பத்தி செய்யப்பட்டு கார்பனாக ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

தேங்காய் சிரட்டைகள் பெரும்பாலும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேங்காய் சிரட்டைகளுக்கு அதிக கிராக்கி

ஒரு கிலோ 36 ரூபாய் என்ற விலையில் கார்பன் உற்பத்திக்காக தேங்காய்ச் சிரட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வெளிநாட்டு சந்தையில் தேங்காய் சிரட்டைகளுக்கு அதிக கிராக்கி நிலவுவதால், தேங்காய் சிரட்டைகளை அழிக்காமல், அவற்றை வருமானமாக பயன்படுத்த முடியும் எனவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது

இந்நாட்டில் வருடாந்தம் தேங்காய் உற்பத்தியானது மூன்று பில்லியன் என்றும் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version