Home இலங்கை அரசியல் வடக்கு, கிழக்கு இளைஞர்களின் எதிர்பார்ப்பு: அடைக்கலநாதன் சுட்டிக்காட்டு

வடக்கு, கிழக்கு இளைஞர்களின் எதிர்பார்ப்பு: அடைக்கலநாதன் சுட்டிக்காட்டு

0

வடக்கு கிழக்கில் உள்ள இளைஞர்,யுவதிகள் மத்தியில் அபிவிருத்தி நடவடிக்கைகள்
தொடர்பாக ஆர்வம் காணப்படுகிறதோடு, இனப்பிரச்சினையும் தீர்ப்பதற்கான வழி
வகைகளையும் கையாள வேண்டும் என்கிற விடையத்தையும் அவர்கள்
எதிர்பார்த்துள்ளதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்
அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (22) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்
போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வடக்கு கிழக்கில் தேர்தல் பிரச்சாரங்களை
முன்னெடுத்து வருகின்றது.இதனுடாக மக்களின் நிலைப்பாட்டையும் தெரிந்து
கொண்டுள்ளோம்.

இளைஞர்களுக்கு பாதிப்பு

இளைஞர் மத்தியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆர்வம்
காணப்படுகிறது.மேலும் இனப்பிரச்சினையும் தீர்ப்பதற்கான வழி வகைகளையும் நாங்கள்
கையாள வேண்டும் என்கிற விடையத்தையும் எதிர் பார்க்கின்றனர்.

குறித்த இரு விடயங்களையும் ஒரே திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்கிற
சூழ்நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.

திறமையுள்ளவர்கள் தெரிவு செய்யப்படாமல்,அரசியல் ரீதியான செயல் பாடுகளில்
தங்களுடன் நிற்கின்றவர்களுக்கு சில அமைச்சர்களைக் கொண்ட கட்சிகள்
வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

குறித்த விடையத்தில் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், தற்போது ஊழல் அற்ற
அரசாங்கம் என கூறப்படுகின்ற தற்போதைய ஜனாதிபதியின் கூற்று எல்லாம் அனைத்து
அபிவிருத்தி ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என இளைஞர்கள்
கூறுகிறார்கள்.” என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version