Home இலங்கை சமூகம் வெள்ளை சீனி இறக்குமதி தொடர்பில் எழுந்துள்ள குற்ற்சாட்டு

வெள்ளை சீனி இறக்குமதி தொடர்பில் எழுந்துள்ள குற்ற்சாட்டு

0

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனிக்கு மட்டும் வரிகளை விதித்தே இலாபத்தில் இயங்கி வந்த உள்ளூர் சீனி ஆலைகள் கடும்நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனிக்கு வெட் (VAT) மற்றும் சமூகப் பாதுகாப்பு வரிகளில் இருந்து அரசாங்கம் விலக்கு அளித்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனிக்கு மட்டும் அந்த வரிகளை விதித்ததே இதற்கு முக்கியக் காரணம் என சீனி தொழிற்சாலை நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி கிலோ ஒன்றின் விலை 325 முதல் 350 ரூபா வரையிலும், இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி கிலோ ஒன்றின் விலை 225 முதல் 250 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளது.

தனியார் துறை

அரசாங்கத்திற்குச் சொந்தமான செவனகல மற்றும் பெல்வத்த ஆகிய இரண்டு சீனி நிறுவனங்களின் கீழ் சுமார் 1,500 தொழிலாளர்களும், 35,000 கரும்பு விவசாயக் குடும்பங்களும் உள்ளதாகவும், 51 தனியார் துறையினரால் நடத்தப்படும் நான்கு உள்ளூர் சீனி ஆலைகளான கல்ஓயா மற்றும் எதிமலே ஆகியவற்றின் கீழ் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையால் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும், கரும்பு விவசாயிகளுக்கு சம்பளம் வழங்க முடியாமலும் தங்களது நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தீர்வாக இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கு உடனடியாக VAT மற்றும் சமூக பாதுகாப்பு வரியை விதித்து வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுர் சீனி தொழிற்சாலை நிர்வாகம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீனி உற்பத்தி 

தற்போது, ​​இலங்கையில் மாதாந்தம் சுமார் 30,000 மெட்ரிக் தொன் சீனி நுகர்வு உள்ளூர் பிரவுன் சீனி உற்பத்தி வருடத்திற்கு சுமார் 120,000 மெட்ரிக் தொன்களாகும்.

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின் அளவு 256,000 மெட்ரிக் தொன்களாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version