Home இலங்கை சமூகம் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

0

Courtesy: சதீஸ்

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் திறக்கப்படவுள்ள
மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த சமூக மட்ட அமைப்பின்
ஏற்பாட்டில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச பொதுமக்களினால் இன்று (15.08.2024 )குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச
செயலகத்திற்கு முன்னால் இடம் பெற்றுள்ளது.

தமிழ் கல்வி அபிவிருத்தி 

இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்,
சமூக ஆர்வலர்கள், தமிழ் கல்வி அபிவிருத்தி ஒன்றியம், சமூக மட்ட அமைப்புக்கள்
என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த மதுபானசாலை ஆயித்தியமலை பகுதியில் திறக்கப்படவிருப்பதாகவும் இது
திறக்கப்படுமானால் சமூக கலாசார சீர்கேடுகள், சமுக விரேத செயற்பாடுகள்
அப்பகுதியில் இடம்பெறும் எனவும், பாடசாலை மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்
எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

“மட்டக்களப்பின் அபிவிருத்தி மதுபான சாலையா, அழிக்காதே அழிக்காதே கலாசாரத்தை
அழிக்காதே, வேண்டாம் வேண்டாம் மதுபானசாலை வேண்டாம் போன்ற கோசங்களை எழுப்பி
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் நிறைவில் அரசாங்க அதிபர், மதுவரித் திணைக்கள அதிகாரி
போன்றோருக்கு பிரதியிடப்பட்ட மனு ஒன்று மண்முனை மேற்கு பிரதேச செயலாளரிடம்
கையளிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version