Home இலங்கை சமூகம் கிண்ணியாவில் ஆபத்தாக மாறும் டெங்கு: வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

கிண்ணியாவில் ஆபத்தாக மாறும் டெங்கு: வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

0

உயிர் கொள்ளி நோயான டெங்கு பரவல் கிண்ணியாவில் ஓர் அனர்த்தமாக மாறும் அபாயம்
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெங்கு நுளம்பு பெருகும் சூழலை வைத்திருப்போர் எவராக இருந்தாலும்
அவர்கள் மீது நீதிமன்றத்தில் உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என கிண்ணியா
நகர சபையின் தவிசாளர்  தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுக்கு அதிகாரம் 

இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா நகர சபையின் தவிசாளர்
எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார்.

வீட்டு உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள், நிறுவன தலைவர்கள், காணி
உரிமையாளர்கள் அனைவரும் இதற்கு பூரணமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும், எமது கவனக்குறைவால் இன்னொருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை
அங்கீகரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version