கிளிநொச்சி-றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் ஊடகப்பணிக்கு தொண்டாற்றிய 16 ஊடகவியலாளரின் சிலைகள் திறந்துவைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வானது கிளிநொச்சி-றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் இன்றையதினம்(14) இடம்பெற்றிருந்தது.
மேலும், ஊடகர்களுக்கான ஓர் நினைவுக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஊடகர் இனத்தின் காவலர்
மேலும், மக்களுக்காக ஆற்றிய பணிக்கான அங்கீகாரமாக, ‘ஊடகர் இனத்தின் காவலர்’ என்ற தேசிய விருது ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
விருது வழங்கும் நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி ரகுராம் மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடயின் மனைவி சந்தியா எக்னலிகொட மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
