Courtesy: H A Roshan
டெங்கு நோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடலானது திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல், நேற்று (21) மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் நடைபெற்றுள்ளது.
டெங்கு சம்பந்தமாக தற்போதைய சூழ்நிலையின் தீவிரம் குறித்தும், மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாக இக்கலந்துரையாடல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
டெங்கு கட்டுப்பாடு
மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் (NDCU) சில நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கப்பட்டன.
எனவே, இந்தச் செயற்பாடுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த துறைசார் அதிகாரிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.