அடுத்த மூன்று வாரங்களுக்கு டெங்கு அபாய நிலை நீடிக்கும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு அபாயம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
டெங்கு தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதி வரையிலான அபாய நிலை தொடரும்.
கடந்த சில வாரங்களை விட தற்போது பதிவாகி வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிலைமை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.
எனினும், டெங்கு அபாயம் உள்ள பகுதிகள் மற்றும் வளாகங்களைச் சுத்தம் செய்யும் பணிகளைத் தொடர வேண்டும். அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
டெங்கு என்பது ஒரே நாளில் தீர்க்கக்கூடிய ஒன்று அல்ல. எனவே தொடர்ச்சியான அவதானம் தேவை. டெங்கு நோய்த் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Source: https://tamilwin.com/article/dengue-infection-risk-continues-for-three-weeks-1784631780
