Home இலங்கை சமூகம் பருத்தித்துறையில் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல்

பருத்தித்துறையில் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல்

0

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய வகையில் சூழலை
பேணியவர்களுக்கு தலா 5000 ரூபா தண்டப்பணம்
விதிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பருத்தித்துறை
நகரசபை, அல்வாய் மற்றும் புலோலி பிரதேசங்களில் கடந்த வாரம் டெங்கு
கட்டுப்பாட்டு களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.

வழக்கு தாக்கல்

இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த பருத்தித்துறை
நகரசபையின் எல்லைக்குட்பட்ட 10 குடியிருப்பாளர்களுக்கும், அல்வாய்
பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 5 குடியிருப்பாளர்களுக்கும், புலோலி
பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 7 குடியிருப்பாளர்களுக்கும் எதிராக நகரசபையின்
பொதுச்சுகாதார பரிசோதகர், அல்வாய் மற்றும் புலோலி பொதுச்சுகாதார
பரிசோதகர் ஆகியோரால் பருத்தித்துறை நீதவான்
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு நேற்றைய தினம் (19.12.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட
வேளை, குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து ஆதன உரிமையாளர்களும் குற்றத்தை
ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் மன்றினால் ஆதன உரிமையாளர்களிற்கு தலா 5000
தண்டப்பணம் வீதம் 110,000 தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version