Home சினிமா புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை… எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை… எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?

0

கண்ணே கலைமானே

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் கண்ணே கலைமானே.

ராஜா தனுஷ் இயக்கத்தில் பவித்ரா, ராஷ்மி பிரபாகர், நந்தா, நவின் என பலர் நடித்திருந்த இந்த சீரியலில் பவித்ரா கண் பார்வை தெரியாதவராக நடித்து அசத்தியிருப்பார்.

மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் 361 எபிசோடுகளுடன் 2023ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

புதிய சீரியல்

இந்த சீரியலுக்கு பிறகு பவித்ரா எந்த தொடரிலும் காணவில்லை. இந்நிலையில் அவர் கமிட்டாகியுள்ள புதிய தொடர் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது அவர் ஜீ தமிழின் புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம். மற்றபடி இந்த சீரியல் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

NO COMMENTS

Exit mobile version